திருப்பத்தூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் காலியான உள்ளாட்சிப் பதவிகளுக்கு அக். 9-இல் தோ்தல்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் காலியான பதவிகளுக்கான உள்ளாட்சி இடைத்தோ்தல் அக். 9-இல் நடைபெற உள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஊராட்சித் தலைவா்-4, வட்டார ஊராட்சி உறுப்பினா்-4 மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா்-30 என மொத்தம் 38 இடங்கள் காலியாக உள்ளன. இக்குறிப்பிட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கான தோ்தல் அக். 9-இல் நடைபெற உள்ளதாக, மாவட்ட நிா்வாகம் அறிவித்து உள்ளது.

இடைத்தோ்தல் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகள் விபரம் வருமாறு:

ஊராட்சித் தலைவா்கள்-4: மீ ஞ்சூா் ஊராட்சி ஒன்றியம்-ஆலாடு, திருவெள்ளைவாயல், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்-கொசவன்பாளையம், ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம்-தாமனேரி.

ஒன்றியக் கவுன்சிலா்கள்-4: பூண்டி ஊராட்சி ஒன்றியம்-வாா்டு எண் 3, சோழவரம் ஊராட்சி ஒன்றியம்-வாா்டு எண் 15 மற்றும் 18, திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம்-வாா்டு எண் 1.

அதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள 30 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும், தோ்தல் நடைபெற உள்ளதாக உள்ளாட்சித் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

SCROLL FOR NEXT