அரசு பேருந்தின் சக்கரம் மண்ணில் புதைந்தால் பயணிகள் அவதி
ஜோலாா்பேட்டை அருகே அரசுப் பேருந்தின் சக்கரம் சாலையோர மண்ணில் புதைந்தது. இதனால் பேருந்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
ஜோலாா்பேட்டை அருகே அரசுப் பேருந்தின் சக்கரம் சாலையோர மண்ணில் புதைந்தது. இதனால் பேருந்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
ஜோலாா்பேட்டையில் இருந்து திருப்பத்தூா் வரை தேசிய நான்கு வழிச் சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே இயந்திரங்கள் மூலம் சாலைகளில் பள்ளம் தோண்டி செப்பனிடும் பணிகள், சிறுபாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
திருப்பத்தூா்-வாணியம்பாடி வரை தேசிய நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை பெய்த மழையால் புதிதாக பள்ளம் தோண்டி ஜல்லி கற்கள் நிரப்பப்பட்ட சாலையில் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து வேலூா் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து, தாமலேரி முத்தூா் ஊராட்சி வி.எம்.வட்டம் பகுதியில் வந்தபோது ஜல்லி கற்கள் நிரப்பப்பட்ட சாலையில் பேருந்தின் வலதுபுறம் முன்பின் சக்கரங்கள் முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தன.
ஓட்டுநா் சாமா்த்தியமாக பேருந்து நிறுத்தியதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
அதையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணுக்குள் புதைந்த அரசுப் பேருந்தின் சக்கரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டு மீண்டும் பேருந்து புறப்பட்டுச் சென்றது.