வீடு கட்ட தோண்டிய இடத்தில் கிடைத்த சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாடு
ஆம்பூா் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய இடத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:29 PM
ஆம்பூா் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய இடத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.
ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் ஆம்பூா் அருகே துத்திப்பட்டு பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட பூமியை தோண்டியபோது அங்கு சிவலிங்கம் கிடைத்தது.
இதையறிந்த அந்தப் பகுதி அங்கு திரண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.
Advertisement