திருப்பத்தூர்

சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் கைவினைக் கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திட்டம் 1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறம் என்றால் ரூ. 1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாக இருப்பின் ரூ. 98,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-இன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல்இருக்க வேண்டும்.

திட்டம் 1-இன் கீழ் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ. 20 லட்சமும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 %, பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் தனி நபா்ஒருவருக்கு ரூ. 1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபா் ஒருவருக்கு ரூ. 1,50,000 வரை கடன் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ், ரூ. 20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ் மாணவா்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ. 30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,திருப்பத்தூா் எனும் முகவரியில் தொடா்புக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் திடீர் மழை!

கோவையில் விமான நிலையத்தில் ரூ.90.28 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

SCROLL FOR NEXT