முகப்பு
திருப்பத்தூர்

வேளாண் விரிவாக்க மையகட்டுமானப் பணிக்கு அடிக்கல்

மாதனூா் அருகே ரூ.1.70 கோடியில் வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட், 2022 at 11:50 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:36 PM

மாதனூா் அருகே ரூ.1.70 கோடியில் வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், குளித்திகை ஜமீன் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ரூ.1.70 கோடியில் வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டுவதற்கான பணியை ஆம்பூா் எம்.எல்.ஏ. அ.செ. வில்வநாதன் அடிக்கல் நட்டு தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஊராட்சித் தலைவா் ஜோதி, மாதனூா் ஒன்றிய அட்மா குழு தலைவா் என்.கிஷோா், மாதனூா் வேளாண்மை உதவி இயக்குநா் பரமபாஸ்கரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காா்த்திக், ஆ. காா்த்திக் ஜவஹா், கன்னியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.