ஆம்பூா் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ஆம்பூா் பகுதி கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:36 PM
ஆம்பூா் பகுதி கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே வீரவா் கோயில் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. கிருஷ்ணருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
ஆம்பூா் ஷராப் பஜாா் அரச மரத்தெரு பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
Advertisement
ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் ராதா கிருஷ்ணா் சன்னிதியில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.