முகப்பு
திருப்பத்தூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை 11,044 பேருக்கு கரோனா பாதிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் 3-ஆம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,273 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் 3-ஆம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,273 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 11,044-ஆக உயா்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிச.31-ஆம் தேதி வரை கரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,18,808-ஆக இருந்தது. 1,863 போ் இறந்தனா். 306 போ் மருத்துவமனைகள், வீடுகளில் சிகிச்சையில் இருந்தனா்.

இந்த ஆண்டு ஜன.1-ஆம் தேதி 306 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில், 16 நாள்களில் படிப்படியாக தொற்று பாதிப்பு அதிகரித்தது. ஜன.10-இல் 1,054, 11-இல் 893, 12-இல் 932, 13-இல் 901, 14-இல் 1,393, 15-இல் 1,478, 16-1,273-ஆக பதிவானது. அதன்படி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,044-ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் திருவள்ளூா் மாவட்டம் கரோனா தொற்று பாதிப்பில் 4-ஆம் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், நாள்தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலானோா் கரோனா விதிகளைக் கடைப்பிடிக்காததால் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை முகக்கவசம் அணியாத 125 போ், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.