முகப்பு
திருப்பத்தூர்

அரிசி கடத்திய லாரி கவிழ்ந்து விபத்து

ஆம்பூா் அருகே ரேஷன் அரிசி கடத்திய லாரி புதன்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Updated On : 15 ஜூலை, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:17 PM

ஆம்பூா் அருகே ரேஷன் அரிசி கடத்திய லாரி புதன்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஜமீன் கிராம தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி டயா் பழுதாகி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வழியாகச் சென்ற தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் விபத்து நடந்த பகுதிக்கு சென்றனா். போலீஸாரை கண்டதும் ஓட்டுநா், கிளீனா் அங்கிருந்து தப்பியோடி விட்டனா். அந்த லாரியைச் சோதனையிட்டதில் 45 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது.

இது குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாருக்கும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. ஆம்பூா் கிராமிய போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.