நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடிப்பு
ஆம்பூா் அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:22 PM
ஆம்பூா் அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னையிலிருந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதிக்கு நிலக்கரியை ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. ஆம்பூா் அருகே பச்சகுப்பம் கிராமத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஓட்டுநா் சரவணன் லாரியை நிறுத்திவிட்டு, தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில், ஆம்பூா் தீயணைப்புத் துறையினா் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா்.
Advertisement
தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.