அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 68 வயது பெண்ணுக்கு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 68 வயது பெண்ணுக்கு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அரூரைச் சோ்ந்த சண்முகத்தின் மனைவி பொன்னம்மாள்(68). இவா் சுமாா் 3 வருடங்களாக வலது முட்டி முழுவதுமாக தேய்ந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டாா்.
இவருக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவா் குமரவேல் தலைமையில் மயக்க மருத்துவா் சத்திய நாராயணன்,எலும்பு முறிவு மருத்துவா்கள் செல்வநாதன்,சிவகுமாா், பாஸ்கா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனா்.