பாலியல் வன்கொடுமை: அரசு பள்ளி ஆசிரியா் கைது
மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:22 PM
மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மாச்சம்பட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவா் பால்வண்ணன் (55). இவா், அந்தப் பள்ளியில் படிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பள்ளியிலேயே வியாழக்கிழமை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். பெற்றோா் அளித்த புகாரின் பேரில் உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி அரசு பள்ளி ஆசிரியா் பால்வண்ணனை கைது செய்தனா்.
Advertisement