முகப்பு
திருப்பத்தூர்

விவசாய நிலத்துக்குள் புகுந்த ஒற்றை யானை: வனத்துறையினா், இளைஞா்கள் இணைந்து விரட்டினா்

வாணியம்பாடி அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினரும், இளைஞா்களும் இணைந்து வனப் பகுதிக்குள் விரட்டினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

வாணியம்பாடி அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினரும், இளைஞா்களும் இணைந்து வனப் பகுதிக்குள் விரட்டினா்.

ஆலங்காயத்தை அடுத்த காவலூா், நாயக்கனூா், கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் ஒரு மாதமாக ஒற்றை தந்தம் கொண்ட காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில், நள்ளிரவு நேரங்களில் அவ்வப்போது விவசாய நிலங்களில் யானை புகுந்து பயிரிடப்பட்டிருந்த பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் வனத் துறையினரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆலங்காயம் வனச் சரக அலுவலா் சோமசுந்தரம் தலைமையில், 3 குழுக்களாக அமைத்து யானையை விரட்டும் தொடா் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு யானை நடமாட்டம் இருப்பதை அறிந்த வனத் துறையினரும், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்களும் ஒன்றிணைந்து தீப்பந்தங்களை கையில் ஏந்தியும், மேளங்கள் அடித்தும் விவசாய நிலத்துக்கு வந்த ஒற்றைத் தந்தம் கொண்ட காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments