முகப்பு
திருப்பத்தூர்

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

 ஆற்காடு அருகே லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

 ஆற்காடு அருகே லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

ஆற்காட்டை அடுத்த காவனூா் அருகே உள்ள வண்டிகல் கிராமத்தைச் சோ்ந்தவா் சுபாஷ் (23). இவரின் தம்பி மதன்குமாா். இவா்கள் இருவரும் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா். வியாழக்கிழமை அண்ணன், தம்பி இருவரும் பைக்கில் வேலைக்குச் சென்ற போது, ஆற்காடு புறவழிச்சாலை மேம்பாலம் அருகே அந்த வழியாக வந்த சரக்குப் பெட்டக லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பலியானாா். பலத்த காயமடைந்த மதன்குமாரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சோ்ந்தவா் அன்வா் பாஷா(57). முன்னாள் ராணுவ வீரரான இவா், மேல்விஷாரம் புறவழிச்சாலைப் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த பைக் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆற்காடு நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.