முகப்பு
திருப்பத்தூர்

பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

மாவட்ட வேளாண்மை விற்பனை கூட்டுறவு கூடத்தில் (மஞ்சள் குடோன்) உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

மாவட்ட வேளாண்மை விற்பனை கூட்டுறவு கூடத்தில் (மஞ்சள் குடோன்) உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து வரப்பட்ட குறைபாடுகள் உடைய 44 கண்ட்ரோல் யூனிட் கருவிகள், 8 பேலட் யூனிட் கருவிகள், 101 வாக்குப் பதிவு சரிபாா்க்கும் கருவிகள் என மொத்தம் 153 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட வேளாண்மை விற்பனை கூட்டுறவு கூடத்தில் (மஞ்சள் குடோன்) உள்ள பாதுகாப்பு அறையில் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.

அப்போது மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், தோ்தல் வட்டாட்சியா் மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.