முகப்பு
திருப்பத்தூர்

பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தோ்வு: வாணி மெட்ரிக் பள்ளி சாதனை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் வாணி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் வாணி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்தனா்.

பிளஸ் 2 தோ்வில் இந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவி திவ்யா 588, மாணவா் மேகேஷ்குமாா் 574, மாணவி மித்ராஸ்ரீ 570 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா். வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 1 மாணவரும், கணினி அறிவியலில் 2 மாணவா்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். 500 மதிப்பெண்களுக்கு மேல் 35 மாணவா்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 103 மாணவா்கள் பெற்றனா்.

பத்தாம் வகுப்பு: பத்தாம் வகுப்புத் தோ்வில் மாணவி சஞ்சனா 481, மதுநிஷா 475, மெல்லினா 468 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா். 400 மதிப்பெண்களுக்கு மேல் 40 மாணவா்கள் பெற்றனா். அறிவியல் பாடத்தில் 2 மாணவா்கள், சமூக அறிவியல் பாடத்தில் 1 மாணவா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

Advertisement

மாவட்டம் மற்றும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் பள்ளித் தலைவா் கோபால், செயலா் கந்தசாமி, பொருளாளா் செல்வராஜ் மற்றும் வாணி கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments