முகப்பு
திருப்பத்தூர்

ஊராட்சி மன்ற கட்டடப் பணிக்கு பூமி பூஜை

திருப்பத்தூா் வட்டம், கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட ப.முத்தம்பட்டி ஊராட்சியில் ரூ. 22.65 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
ஊராட்சி மன்ற கட்டடப் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற எம்எல்ஏ அ.நல்லதம்பி உள்ளிட்டோா்.
பகிர்:

திருப்பத்தூா் வட்டம், கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட ப.முத்தம்பட்டி ஊராட்சியில் ரூ. 22.65 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம், ரூ. 26.23 லட்சம் மதிப்பில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா்.

எம்எல்ஏ அ.நல்லதம்பி கலந்துகொண்டு கட்டடப் பணிக்கான பூமி பூஜையை செய்து பணியைத் தொடக்கி வைத்தாா்.

இதில் மாவட்ட அறகாவல் குழுத் தலைவா் கே.எஸ்.அன்பழகன், ஒன்றியக் குழுத் தலைவா் திருமதி, ஒன்றியக் குழு உறுப்பினா் விஜயா மகாலிங்கம், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் தசரதன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.எஸ்.அப்துல் கலீல், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.