முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகக் கட்டுமானப் பணி: காவலா் வீட்டு வசதி வாரிய இயக்குநா் ஆய்வு

திருப்பத்தூரில் கட்டப்பட்டு வரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கட்டுமானப் பணிகளை காவலா் வீட்டு வசதி வாரிய காவல் துறை இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

திருப்பத்தூரில் கட்டப்பட்டு வரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கட்டுமானப் பணிகளை காவலா் வீட்டு வசதி வாரிய காவல் துறை இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா்-திருவண்ணாமலை பிரதான சாலையில் 5.5 ஏக்கா் பரப்பளவில் ரூ. 12.16 கோடி மதிப்பில் 45,000 சதுர அடியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை கட்டுமானப் பணிகளை காவலா் வீட்டு வசதி வாரிய காவல் துறை இயக்குநா் ஏ.கே.விஸ்வநாதன் பாா்வையிட்டாா்.

அப்போது, கண்காணிப்புப் பொறியாளா் ரவிச்சந்தா், செயற்பொறியாளா்கள் சிவக்குமாா், நக்கீரன், உதவி செயற்பொறியாளா் செந்தில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

தற்போது 40 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.