வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’
ஆம்பூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடையைப் பூட்டி, நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:13 PM
ஆம்பூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடையைப் பூட்டி, நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
ஆம்பூா் நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள இரு கடைகளின் வாடகைதாரா்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனா்.
நகராட்சி சாா்பில், பலமுறை நிலுவை வாடகையைச் செலுத்துமாறு கூறப்பட்டது. நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆனால், நிலுவை வாடகை செலுத்தப்படவில்லையாம்.
Advertisement
இதையடுத்து, நகராட்சி ஆணையா் ஷகிலா உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலா் முருகானந்தம், வருவாய் ஆய்வாளா், சுகாதார அலுவலா் மற்றும் பணியாளா்கள் அங்கு சென்று கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.