திருப்பத்தூர்

ஆம்பூா் பகுதியில் சூறாவளி காற்றுடன்பலத்த மழை: வாழை மரங்கள் சேதம்

DIN

ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக கடுமையான வெயில் காய்ந்தது. அதனால் இரவு நேரத்தில் அதிகமான புழுக்கம் காணப்பட்டது. கடந்த சில நாள்களாக காலையில் கடுமையான வெயிலும், மாலை நேரத்தில் வானம் மேக மூட்டத்துடனும் காணப்பட்டு குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. இந்த மழை காரணமாக ஆம்பூா் மற்றும் கிராமப் புறங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

தெருக்கள், சாலைகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

பலத்தமழை காரணமாக மாதனூா் ஒன்றியம் மோதகப்பல்லி கிராமத்தில் விவசாயி தில்லைவாணனுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

அதே போல பல இடங்களில் தென்னை மரங்கள், கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பல விவசாயிகளின் விளை பொருள்கள் சேதமடைந்தன.

உமா்ஆபாத் - உதயேந்திரம் சாலையில் மேல்சாணாங்குப்பம் கிராத்தில் மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் தென்னை மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று முறிந்து விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா். தென்னை மரம் முறிந்து விழுந்ததால் அங்கிருந்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது.

ஆம்பூா் பகுதியில் 46 மி.மீ. மழை:

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெய்த பலத்த மழையால் திருப்பத்தூா் மாவட்டத்திலேயே ஆம்பூா் பகுதியில் அதிகபட்சமாக 46 மி.மீ. மழை பாதிவாகியுள்ளது.

மழை அளவு விவரம்:

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைப் பகுதி - 46 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருப்பத்தூா்- 35.10, ஆலங்காயம்- 32, ஆம்பூா்- 27.40, வாணியம்பாடி- 16, நாட்டறம்பள்ளி- 6.20, திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை -2 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT