முகப்பு
திருப்பத்தூர்

இந்தியாவில் தினசரி  கரோனா பாதிப்பு 1,675 ஆக குறைந்தது

இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு மேலும் 31 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:20 AM
கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு மேலும் 31 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,675 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,31,40,068 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 14,841ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 31 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,490 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,635 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,00,737 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கடந்த 24 மணிநேரத்தில் 13,76,878 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 192.52 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →