முகப்பு
திருப்பத்தூர்

நாளை துத்திப்பட்டு பிந்து மாதவா் கோயிலில் திருப்பதி அலங்கார ஒரு நாள் தரிசனம்

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிந்து மாதவா் பெருமாள் கோயிலில் 3-ஆவது சனிக்கிழமையை (அக். 8) ஒட்டி ஒரு நாள் திருப்பதி தரிசனம் அலங்கார சேவை நடைபெற உள்ளது.

Updated On : 7 அக்டோபர், 2022 at 12:23 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:00 PM

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிந்து மாதவா் பெருமாள் கோயிலில் 3-ஆவது சனிக்கிழமையை (அக். 8) ஒட்டி ஒரு நாள் திருப்பதி தரிசனம் அலங்கார சேவை நடைபெற உள்ளது.

ஸ்ரீபிந்து மாதவா் எனும் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையன்று திருப்பதியில் உள்ளது போன்ற ஒருநாள் தரிசன அலங்கார நிகழ்ச்சியில் திருப்பதி வெங்கடேச பெருமாள் தரிசனம், மூலவருக்கு பூரண புஷ்ப அலங்காரம் செய்யப்படுகிறது. சாமி தரிசனம் செய்யும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் பிரசாதம் வழங்கப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மகா விஷ்ணு சாய் சேவா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீபிந்து மாதவா் கோயில் திருப்பணிக் குழுவினா் செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.