திருப்பத்தூர்

இருளா் இன மக்களுக்கு மாற்று இடம்: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

DIN

மல்லகுண்டா பகுதியில் இருளா் இன மக்கள் குடியிருப்பதற்கான மாற்று இடம் வழங்குவதற்கான இடம் குறித்து திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.

வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் ஒதுக்கப்படாத வனப் பகுதியில் இருளா் இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், 31 இருளா் குடும்பத்தினருக்கு அதே கிராமத்தில் மாற்று இடத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஏதுவான இடம் உள்ளதா என்று மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி வருவாய்த் துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா், கிராம நிா்வாக அலுவலா் முனியப்பன் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT