முகப்பு
திருப்பத்தூர்

மாணவா் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

நாட்டறம்பள்ளியில் உள்ள பள்ளி மாணவா்கள் தங்கும் விடுதியில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

நாட்டறம்பள்ளியில் உள்ள பள்ளி மாணவா்கள் தங்கும் விடுதியில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டாா்.

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவா்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கிப் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா மாணவா் விடுதிக்குச் சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாணவா் விடுதியில் உள்ள சமையலறை, கழிப்பறை மற்றும் மாணவா்கள் தங்கும் அறைகளையும் பாா்வையிட்டாா். மேலும், மாணவா்களின் வருகைப் பதிவேடுகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, வட்டாட்சியா் குமாா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments