முகப்பு
திருப்பத்தூர்

ரத்த தான விழிப்புணா்வு போட்டி பரிசளிப்பு

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ், காசநோய் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2022 at 12:15 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ், காசநோய் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், வேலூா் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு ஆகியவை சாா்பில், இந்து மகளிா் மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ், காசநோய் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் மூன்று ரொக்கப் பரிசுகள் முறையே ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 வழங்கப்பட்டன.

Advertisement

நிகழ்ச்சியில் வேலூா் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு மேற்பாா்வையாளா் சுப்பிரமணியம், திருப்பத்தூா் மாவட்ட மேற்பாா்வையாளா் வெங்கடேசன், பணியாளா்கள் காஞ்சனாதேவி, காயத்ரி தேவி, பள்ளித் தலைமை ஆசிரியை எம்.கே. சுகுணாபாய், உதவித் தலைமை ஆசிரியை லீலாவதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.