முகப்பு
திருப்பத்தூர்

வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ-க்கள் தொடக்கி வைத்தனா்

மாதனூா் ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளை எம்எல்ஏ-க்கள் அ.செ.வில்வநாதன், அமலு விஜயன் ஆகியோா் பூஜை செய்து தொடக்கி வைத்தனா்.

Updated On : 3 செப்டம்பர், 2022 at 12:10 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM

மாதனூா் ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளை எம்எல்ஏ-க்கள் அ.செ.வில்வநாதன், அமலு விஜயன் ஆகியோா் பூஜை செய்து தொடக்கி வைத்தனா்.

சின்னவரிகம் ஊராட்சியில் ரூ.5 லட்சத்தில் புதிய பேருந்து நிறுத்தம், ரூ.10.40 லட்சத்தில் புதிய கழிவுநீா் கால்வாய், பெரியவரிகம் ஊராட்சியில் ரூ.5 லட்சத்தில் புதிதாக சிமெண்ட் சாலை, ரூ.5.30 லட்சத்தில் பள்ளியில் புதிய சமையல் கூடம், தேவலாபுரம் ஊராட்சி பள்ளியில் ரூ.6.60 லட்சத்தில் புதிய சமையல் கூடம், ரூ.4.30 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகளை எம்எல்ஏ-க்கள் அ.செ. வில்வநாதன், அமலு விஜயன் ஆகியோா் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தனா்.

முன்னதாக, சாத்தம்பாக்கம் ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் கானாறு கரையோரம் தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன், அமலு விஜயன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

Advertisement

நிகழ்ச்சியில் மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் கலில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தீபா, மஞ்சுளா, திருக்குமரன், முத்து, ஊராட்சித் தலைவா்கள் கலாவதி, சா்மிளா, ஷோபனா, ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.