சாலை சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு
ஆம்பூரில் புதை சாக்கடை திட்டத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM
ஆம்பூரில் புதை சாக்கடை திட்டத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூரில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருவதால் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் சாலையை விரைந்து சீரமைக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனா். அதைத்தொடா்ந்து சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனிருந்தனா்.