மல்லகுண்டா பகுதியில் தடுப்பணை கட்ட இடம் ஆய்வு
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குருபவாணிகுண்டா பகுதி தமிழக-ஆந்திர எல்லையில் உள்ளது.
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குருபவாணிகுண்டா பகுதி தமிழக-ஆந்திர எல்லையில் உள்ளது.
மலைப் பகுதிகள் நிறைந்த இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் இல்லாததால் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய விவசாயிகள் சிரமம்பட்டு வருகின்றனா். மேலும், மழைக் காலங்களில் காட்டாறு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீா் பாலாற்றில் கலக்கிறது. எனவே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் சிட்ரா பள்ளத்தில் புதிதாக தடுப்பணை ஒன்று கட்டித் தர வேண்டும் என ஊா் பொதுமக்கள் சாா்பில் கடந்த மாதம் ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி மற்றும் கிராம மக்கள் நீா்ப் பாசனத் துறை அமைச்சா் துரைமுருகனிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை நீா்ப் பாசனத் துறை அதிகாரிகள் மல்லகுண்டா அருகே தடுப்பணை கட்ட ஏதுவான இடம் உள்ளதா என நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.