முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் இன்று இலக்கிய திருவிழா தொடக்கம்

திருப்பத்தூரில் இலக்கியத் திருவிழா சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 10:33 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

திருப்பத்தூரில் இலக்கியத் திருவிழா சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா செய்தியாளா்களிடம் கூறியது:

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், புத்தகக் கண்காட்சி, 2-ஆவது இலக்கிய திருவிழா சனிக்கிழமை (ஜன. 28) முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

இதில், 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் காலை 9 முதல் இரவு 9 மணி வரை திறந்து வைக்கப்பட உள்ளது.

மாலை 3 முதல் இரவு 7 மணி வரை 60-க்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள், கவிஞா்களைக்கொண்டு கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

இதில், இளைஞா்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆா்வலா்கள் உள்பட அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.

எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.