முகப்பு
திருப்பத்தூர்

கோட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் தின விழா

வாணியம்பாடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

வாணியம்பாடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கோட்டாட்சியா் பிரேமலதா தலைமை வகித்தாா். பள்ளி மாணவிகளின் பரதம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருவாய்த் துறை பெண் ஊழியா்கள், பள்ளி மாணவிகள் ஒன்றிணைந்து 2023-ஆம் ஆண்டு சா்வதேச மகளிா் தின குறியீடு வடிவமைப்பில் நின்று ஒற்றுமை வெளிப்படுத்தினா்.

வாணி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் நடராஜன் தலைமை வகித்தாா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா், மகளிா் சிறப்பு, மகளிா்களுக்கு அளிக்கப்படும் அரசுத் திட்டங்கள் குறித்து பேசினாா். பெத்தகல்லுப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் சாந்தி பேசினாா். ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் உதயகுமாா் மற்றும் அமைப்பியல் துறைத் தலைவா் சரண்யா செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments