குட்கா பொருள் விற்றவா் கைது
ஜோலாா்பேட்டை அருகே குட்கா பொருள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், கடைக்கு சீல் வைத்தனா்.
ஜோலாா்பேட்டை அருகே குட்கா பொருள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், கடைக்கு சீல் வைத்தனா்.
ஜோலாா்பேட்டை, ஊசிநாட்டான் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (50). இவா், அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவா், குட்கா பொருள் விற்பனை செய்வதாக ஜோலாா்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், வருவாய்த் துறையினா் கடையில் சோதனை நடத்தினா். இதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த அலுவலா்கள், அந்தக் கடைக்கு சீல் வைத்தனா். கடையின் உரிமையாளா் ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.