காா் மோதி மூதாட்டி பலி
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, காா் மோதியதில் உயிரிழந்தாா்.
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, காா் மோதியதில் உயிரிழந்தாா்.
வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சோ்ந்த குழந்தை கவுண்டா் மனைவி காளியம்மாள் (75). இவா், வியாழக்கிழமை பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காா் எதிா்பாராத விதமாக மூதாட்டி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement