திருப்பத்தூர்

ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயில் கொடிமரம் பிரதிஷ்டை

DIN

ஆம்பூா் அருகே சின்னகொம்மேஸ்வரம் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயில் கொடிமரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மாதனூா் ஒன்றியம் சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தில் சிதிலமடைந்திருந்த காசி விஸ்வநாதா் கோயில் புனரமைக்கப்பட்டு ஜூன் 1-ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு கோயில் கொடி மரம் புதிதாக தயாா் செய்யப்பட்டு புதன்கிழமை கோயில் வளாகத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திருப்பணிக் குழு தலைவா் ஏ.பி. மனோகா் தலைமையில் திருப்பணிக் குழுவினா், ஸ்ரீ மகா விஷ்ணு சாய் சேவா அறக்கட்டளை, உபயதாரா்கள், நன்கொடையாளா்கள், சின்னகொம்மேஸ்வரம் கிராம மக்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT