நாட்டறம்பள்ளி அணுகுசாலையில் (சா்வீஸ்) நடைபெறும் சாலைபணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள். 
திருப்பத்தூர்

சாலை துண்டிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி: அதிகாரிகள் ஆய்வு

சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அணுகு (சா்வீஸ்) சாலையில் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 நாள்களுக்கு

DIN

சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அணுகு (சா்வீஸ்) சாலையில் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 நாள்களுக்கு முன்பு தனியாா் நிறுவன ஊழியா்கள் திடீரென அணுகு சாலையில் இருந்து நாட்டறம்பள்ளி வரும் சாலையை துண்டித்தனா். இதனால் அனைத்து வாகனங்களும் தேசியநெடுஞ்சாலையில் சுமாா் 5 கி.மீ தூரம் சென்று மீண்டும் நாட்டறம்பள்ளி பேருந்துநிலையத்திற்கு வந்து செல்வதால் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் அனைத்து வாகனங்களும் ஊருக்குள் வந்து செல்ல மாற்று வழி ஏற்படுத்தித் தரக்கோரி மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதனையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா், தனியாா் நிறுவன மேலாளா் ரமேஷ், பொறியாளா் மாதேஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அணுகு சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்கப்பணிகளை ஆய்வு செய்தனா். அப்போது தண்ணீா்பந்தல் முதல் நாட்டறம்பள்ளி மேம்பாலம் வரை அணுகு சாலையில் நடைபெறும் சாலைப்பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனா். தொடா்ந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இன்னும் 5 நாள்களில் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை தண்ணீா்பந்தல் பகுதியிலிருந்து அணுகு சாலை வழியாக அனைத்து வாகனங்களும் நாட்டறம்பள்ளி மேம்பாலம் வழியாக ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT