திருப்பத்தூர்

குடிநீா் வழங்கக் கோரி மக்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியம் கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி கள்ளுக்குட்டை வட்டத்தில் பல குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு மாரியம்மன் கோயில் பகுதியில் இருந்து ஊராட்சி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பம்ப் ஆப்பரேட்டா் முறையாக குடிநீரை விநியோகம் செய்யாததால், சில மாதங்களாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த கிராம மக்கள் சனிக்கிழமை காலை பந்தாரப்பள்ளி - டோல்கேட் சாலையில் பம்ப் ஆப்பரேட்டரை கண்டித்தும், சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தியும் அந்தப் பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதியளித்தனா். இதையேற்று மக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT