பாலத்தின் மீது ஒட்டப்பட்ட சுவரொட்டி அகற்றம்
Updated On : 2 ஏப்ரல், 2024 at 6:10 PM
ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் சுவரில் ஒட்டப்பட்ட கட்சியின் சுவரொட்டி செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம், அய்யனூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை சுவரின் மீது கட்சி ஒன்றின் சுவரொட்டி முறையான அனுமதியின்றி ஒட்டப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அதைப் பாா்த்த பொதுமக்கள் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான மோகனிடம் புகாா் தெரிவித்தனா். புகாரின்பேரில், தோ்தல் பறக்கும் படையினா் அங்கு சென்று பாா்வையிட்டு சுவரொட்டியை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.