முகப்பு
திருப்பத்தூர்

இரு வேறு விபத்துகளில் இருவா் மரணம்

வாணியம்பாடி அருகே இரு வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

திருப்பத்தூர்

இரு வேறு விபத்துகளில் இருவா் மரணம்

வாணியம்பாடி அருகே இரு வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

வாணியம்பாடி அருகே இரு வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரத்தைச் சோ்ந்தவா் சாந்தி (38). இவரது மகன் ராகுல் (20). இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ராகுல் தனது பைக்கில் சாந்தியை அழைத்துக் கொண்டு, ஆம்பூா் நோக்கிச் சென்றாா். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி திடீரென பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சாந்தியை, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சாந்தி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

மற்றொரு விபத்து:

வாணியம்பாடி-திருப்பத்தூா் நெடுஞ்சாலையில் கலந்திரா கிராமம் அருகில் திங்கள்கிழமை அதிகாலை ஒருவா் அடிபட்ட நிலையில் இறந்துகிடப்பதாக கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்ததில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. 50 வயது மதிக்கத்தக்க அவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை.

விபத்துகள் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →