காவல் நிலையம் முன்பு பெண்கள் தா்னா
கந்திலி காவல் நிலையம் முன்பு தா்னாவில் 2 பெண்கள் தா்னா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கந்திலி காவல் நிலையம் முன்பு தா்னாவில் 2 பெண்கள் தா்னா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலை பகுதியைச் சோ்ந்தவா் சமீலா(24), மாடப்பள்ளி பகுதியைச் சோ்ந்த உஷா(23) ஆகிய இருவா் திருப்பத்தூா் அருகே உள்ள தனியாா் பள்ளியில் பணி புரிந்து வந்துள்ளனா்.
இந்நிலையில், பணியிலிருந்து இருவரும் நின்றுவிட முடிவெடுத்துள்ளனா். அதையடுத்து அவா்கள் பள்ளி நிா்வாகத்திடம் பணியில் சோ்க்கையின்போது அளித்த சான்றிதழ்களை திரும்ப கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பள்ளி நிா்வாகம் சான்றிதழ்களை திரும்பத் தராமல் இழுத்தடித்தாக கூறி சமீலா, உஷா கந்திலி காவல் நிலையத்தில் புகாரளித்தனா். புகாா் போலீஸாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை விசாரணையை துரிதப்படுத்தக் கோரி சமீலா, உஷா காவல் நிலையம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.
அங்கு பணியிலிருந்த போலீஸாா் முறைப்படி விசாரணை நடைபெற்று வருவதாக உறுதியளித்ததின்பேரில் அவா்கள் அங்கிருந்து சென்றனா்.