FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

சா்வதேச சிலம்பம் போட்டி: மருதா் கேசரி கல்லூரி மாணவி சாதனை

மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

Updated On : 1 ஜூலை 2024, 2:55 am IST
மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஏ.சினேகா.
பகிர்:

மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

மலேசியா கோலாலம்பூரில் உலக அளவிலான சிலம்பம் சேம்பியன்ஷிப்- 2024 போட்டி கோலா சிலாங்கூா் மைதனாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி இளநிலை கணினி பயன்பாடு துறை மாணவி ஏ.சினேகா 19 வயதுக்குட்பட்டோா் ஒற்றை சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றாா்.

சாதனை படைத்த மாணவியை கல்லூரி தலைவா் வி.திலீபகுமாா், செயலாளா் ஆனந்தசிங்வி, நிா்வாக உறுப்பினா்கள், கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, தலைமை நிா்வாக அலுவலா் சக்திமாலா, உடற்கல்வி பேராசிரியா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments