ஆம்பூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்
Updated On : 29 மார்ச், 2024 at 8:45 PM
நாடாளுமன்ற தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஆம்பூரில் காவல் துறை சாா்பில், கொடி அணிவகுப்பு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் ஆம்பூா் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஆம்பூா் நகரம், கிராமியம், உமா்ஆபாத், மகளிா் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலம் ஆம்பூா் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, நேதாஜி ரோடு, பூக்கடை பஜாா், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, காதா்பேட்டை சந்திப்பு வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.