முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

Updated On : 29 மார்ச், 2024 at 10:13 PM
வாணியம்பாடியில் நடைபெற்ற போலீஸாா் கொடி அணிவகுப்பு ஊா்வலம்
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 6:39 PM

வாணியம்பாடியில் காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. தோ்தலையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்கு செலுத்தவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வாணியம்பாடி காவல் துறை சரகம் சாா்பில் கொடி அணி வகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. டிஎஸ்பி விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் 3 காவல்ஆய்வாளா்கள், 100 போலீஸாா் கலந்து கொண்டனா். ஊா்வலம் பேருந்துநிலையம் அருகில் இருந்து புறப்பட்டு சி.எல் சாலை, கச்சேரிசாலை, ஆற்றுமேடு, பஜாா் வீதி, ஜின்னா சாலை வழியாக சென்று கோணாமேடு பகுதியில் முடிவடைந்தது.