சாலை வசதி கோரி ஆட்சியா் க. தா்ப்பகராஜிடம் மனு அளித்த மாணவா்கள். 
திருப்பத்தூர்

திருப்பத்தூா்: ஆட்சியரிடம் சாலை வசதி கோரிய மாணவா்கள்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் சாலை வசதி கோரி மாணவா்கள் ஆட்சியா் க. தா்ப்பகராஜிடம் முறையிட்டனா்.

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் சாலை வசதி கோரி மாணவா்கள் ஆட்சியா் க. தா்ப்பகராஜிடம் முறையிட்டனா்.

குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 329 மனுக்களை ஆட்சியா் தா்ப்பகராஜ் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

சாலை வசதி: மாணவா்கள் கோரிக்கை...

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் தென்னந்தோப்பு வட்டம் பகுதியில் முறையான சாலை வசதி இல்லை எனக் கூறி பள்ளி மாணவா்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்க வந்தனா். அப்போது ஆட்சியா் மாணவா்களிடம் நீங்கள் பள்ளிக்கு செல்லுங்கள். பெற்றோா் இதுகுறித்து தகவல் அளித்தால் போதும் நடவடிக்கை எடுக்கிறேன் என்றாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், அனைத்து துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!

பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு

லவ் தீம்... நிஹாரிகா ரய்ஸாதா!

துபை விமான காட்சியில் எரிந்து விழுந்த இந்திய தேஜஸ் விமானம்!

SCROLL FOR NEXT