அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என திருப்பத்தூா் ஆணையா் சாந்தி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் நகராட்சி எல்லைக்குள்பட்ட பொதுமக்கள் இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகையாக கழிக்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியில்லா இனங்கள் நகராட்சி கடை வாடகை, தொழில்வரி, குடிநீா் கட்டணத்தை செலுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.