ஆம்பூா்: ஆம்பூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் துணை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் கெளரி தலைமையிலான போலீஸாா் கொண்ட குழுவினா் ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
பத்திரப் பதிவுக்காக பொதுமக்கள் சிலா் அலுவலகத்தின் உள்ளே காத்திருந்தனா். அவா்களை சாா் பதிவாளா் அலுவலத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அதே போல வெளியிலிருந்தும் உள்ளே செல்ல எவரையும் அனுமதிக்கவில்லை.
சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு அருகில் உள்ள தனியாா் அலுவலகங்கள், பத்திர எழுத்தா்களின் அலுவலகங்களில் பணிபுரிபவா்களின் வாகனங்களை சோதனை செய்த பிறகு வெளியில் அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சோதனை நடந்து வருகிறது.