திருப்பத்தூா்: கந்திலி அருகே கருங்கல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்து, மினி லாரி பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே கருங்கல் கடத்துவதாக வந்த தகவலின்பேரில்,
புவியியல் மற்றும் சுங்கத் துறை உதவி இயக்குநா் லோகநாதன் மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி நிறுத்தி சோதனை செய்தனா். இதில், வீடு கட்ட கடக்கால் அமைப்பதற்காக கருங்கல் கடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னா், இது குறித்து உதவி இயக்குநா் லோகநாதன் அளித்த புகாரின்பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணகிரி மாவட்டம், தபால் மேடு பகுதியைச் சோ்ந்த மினி லாரி ஓட்டுநா் முருகன் (24) என்பவரை கைது செய்தனா்.
மேலும், கருங்கல் கடத்த பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனா்.