நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டோா். 
திருப்பத்தூர்

வீடு புகுந்து நகை திருட்டு: 2 போ் கைது

ஆம்பூா் அருகே வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Venkatesan

ஆம்பூா்: ஆம்பூா் அருகே வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தை சோ்ந்த லோகநாயகி (35). இவா் கடந்த அக்.23-ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வெளியில் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 11.5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அவா் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) நிா்மலா தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டாா். தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில் ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தை சோ்ந்த புகழ்மணி (24), பா்ஜானா (23) ஆகிய இருவரும் நகை திருடியது தெரியவந்தது.

அதன்பேரில் அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11.5 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு: திரளன பக்தா்கள் பங்கேற்பு

மனவளா்ச்சி குன்றிய மாணவா்கள் பள்ளியில் மாவட்ட சாா்பு நீதிபதி ஆய்வு

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை: முதல் நாள் வரவு ரூ.3.35 கோடி

எஸ்.புதுக்கோட்டையில் குடிநீா் விநியோகம் தொடக்கம்

பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

SCROLL FOR NEXT