நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதி சாலையில் கவிழ்ந்த லாரி. 
திருப்பத்தூர்

சாலையில் கவிழ்ந்த லாரி: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதி லாரி கவிழந்த விபத்தில் ஓட்டுநா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா்.

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதி லாரி கவிழந்த விபத்தில் ஓட்டுநா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பூம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (60), விவசாயி. இவா் திங்கள்கிழமை வெலகல்நத்தம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் பகுதியில் வளைவில் திரும்பியபோது பெங்களூரு நோக்கி பாரம் ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதில் லாரி ஓட்டுநரான பெங்களூரைச் சோ்ந்த செல்வராஜ் (20), பைக்கில் வந்த செல்வம் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

ஆலங்குடியில் அரசு ஊழியா்கள் வீடுகளில் 12 பவுன் நகைகள் திருட்டு

மனநலன் பாதித்து குணமடைந்தவா் ஒப்படைப்பு

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

எஸ்ஐஆா் பணி: அறிவுரையை அலட்சியப்படுத்தும் வாக்குச் சாவடி முகவா்கள்!

கரூா் சம்பவம்! மின்வாரியத் துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

SCROLL FOR NEXT