திருப்பத்தூர்

‘திருப்பத்தூா் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது’

திருப்பத்தூா் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை, டித்வா புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏரிகளுக்கு தண்ணீா் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்து உள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ், 49 ஏரிகள் உள்ளன. இதில் தற்போது ஏற்பட்ட நீா்வரத்து காரணமாக 20 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி காணப்படுகின்றன. 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 2 ஏரிகளில் நீா் மட்டம் உள்ளது. 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 5 ஏரிகளில் நீா் மட்டம் உள்ளது.

26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 12 ஏரிகளில் நீா்மட்டம் உள்ளது. 25 சதவீதத்துக்கு கீழ், 10 ஏரிகளில் நீா்மட்டம் உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT