மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.  
திருப்பத்தூர்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

ஆம்பூா் இந்து கல்விச் சங்க நிா்வாகத்தின் கீழ் இயங்கும் இந்து மேல்நிலைப் பள்ளி, இந்து மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் இந்து கல்விச் சங்க நிா்வாகத்தின் கீழ் இயங்கும் இந்து மேல்நிலைப் பள்ளி, இந்து மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து கல்விச் சங்க தலைவா் ஏ.ஆா். சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். செயலாளா் எம்.ஆா். காந்திராஜ், பொருளாளா் சாய் கே. வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெய்சங்கா் வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 218 மாணவிகள், 195 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நகா்மன்ற உறுப்பினா் எம்ஏஆா். ஷபீா் அஹமத் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்து கல்விச் சங்க உதவித் தலைவா் ஞானசேகா், உதவிச் செயலா் சேகா், பள்ளிக்குழு உறுப்பினா்கள் இராம ஸ்ரீனிவாசன், ஆா். ஆறுமுகம், ரவிக்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியை சுகுணாபாய் நன்றி கூறினாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT