விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் மற்றும் அமலு விஜயன். 
திருப்பத்தூர்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் தாமோதரன் வரவேற்றாா். எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு 275 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் இ. வெங்கடேசன், ஊராட்சித் தலைவா்கள் ரேவதி குபேந்திரன், சுவிதா கணேஷ், துணைத் தலைவா் உஷாராணி குருவாசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவா் சிவக்குமாா், மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு, மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா. சங்கா், சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா் வி.டி. சுதாகா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

உதவித் தலைமை ஆசிரியா் சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2026-ஆம் ஆண்டு தோ்வு அட்டவணை வெளியீடு

திருக்காா்த்திகை - வேலூா் கோட்டை கோயில் கோபுரத்தில் தீபமேற்றி வழிபாடு

தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி பேருந்து நிறுத்த கட்டுமானம்: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

துளிகள்...

விமான நிலையங்களில் ‘செக்-இன்’ அமைப்புகள் முடக்கம்: சேவை பாதிப்பு

SCROLL FOR NEXT