திருப்பத்தூர்

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் மனு

ஆலங்காயம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: ஆலங்காயம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 424 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷண குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தனா்.

பணியின்போது உயிரிழந்த கிராம உதவியாளா்களின் வாரிசுதாரா்கள் 3 பேருக்கு பணிநியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

ஆலங்காயம் அருகே கிரிசமுத்திரம், நெக்னாமலை கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

50 ஆண்டுகளுக்கு முன்பு நெக்னாமலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால்,அங்கு இருந்து கிரிசமுத்திரம் பகுதிக்கு வந்து வசித்து வருகிறோம். தற்போது நெக்னாமலை கிராமத்தில் போதுமான அடிப்படை ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், நாங்கள் எங்களது சொந்த கிராமத்திற்கு செல்ல விரும்புகிறோம். எங்களுக்கு அங்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

ஜலகாம்பாறை பகுதி பொதுமக்கள் அளித்த மனு: பெருமாப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 1-ஆவது வாா்டுக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் சாலை வசதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சோ்ந்த வடிவேல் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், தமிழக விவசாயிகள் சங்கத்தை சோ்ந்த ராஜாபெருமாள் தலைமையில் அளித்த மனு:

பூங்குளம், ஓமகுப்பம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கருவிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே அவற்றை பழுது நீக்க வேண்டும். புல்லூா் தடுப்பணையில் இருந்து வரும் கால்வாயை ஏராளமானோா் ஆக்கிரமித்துள்ளனா். எனவே அதனை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT